கப்பலில் இருந்து கடலில் விழுந்த பெண்- 10 மணி நேரம் போராடி மீட்பு

நார்வே நாட்டின் வர்கரோ லாவில் இருந்து வெனீஸ் நகருக்கு பயணிகள் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

குரேஷிய கடல் பகுதியில் சென்றபோது கை லாங்ஸ்டாப் என்ற பெண் பயணி கப்பலின் கூரை பகுதிக்கு ஏறினார்.

அப்போது கால் வழுக்கி கடலில் விழுந்து விட்டார். அதை கப்பலில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. கை லாங்ஸ்டாப் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
சுமார் 10 மணி நேரமாக தத்தளித்துக் கொண்டிருந்த அவரை அந்த வழியாக படகில் சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் போராடி அவரை மீட்டனர். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் கடலில் 10 மணி நேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். இந்த அற்புதமான மனிதர்கள் என்னை மீட்டார்கள்” என தெரிவித்துள்ளார்

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு