வாள்வெட்டுக்குழுவினரின் அட்டகாசத்தால் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்!

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

 

தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த வைத்தியர்கள், கைது செய்யப்பாடத விடத்து, தாம் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளனர்

.

யாழ். கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் உள்ள வைத்தியரின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி உள்நுழைந்த வாள் வெட்டுக்குழு வீட்டின் யன்னல் கண்ணாடிகள் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திய பின்னர் தப்பி சென்றமையை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு