பலாலி விமான நிலைய ஓடுபாதை பரிசோதனையுடன் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தை ஆராய்வதற்காக மூன்று பேர் கொண்ட இந்திய அதிகாரிகளின் குழு ஒன்று, இன்று அங்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்றையதினம் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. இன் நிகழ்வு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அதன் அமைவிடம் மற்றும் ஓடுபாதையின் நிலை குறித்து ஆராய்வதற்காக, இந்திய அதிகாரிகள் அங்கு செல்கின்றனர்.

அவர்கள் தங்களது ஆய்வு அறிக்கையை இந்திய அரசாங்கத்திடம் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இன்றையதினம் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு