நாடாலுமன்றத்தில் இருக்கும் கட்சி தலைவர்களுக்கு கூட்டம்

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்று நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாகாணசபை எல்லை நிர்ணயம் தொடர்பிலான விவாதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்ட உள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயம் தொடர்பில் நாளைய தினம் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு