ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீச்சலில் 50 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் சீனாவின் லு ஸியாங் 26.98 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.
இதற்கு முன்பு சீனாவின் ஜாவ் ஜிங் 2009 ஆம் ஆண்டு உலக சம்பியன்ஷிப்பில் 27.06 வினாடிகளில் இலக்கை எட்டியதே உலக சாதனையாக இருந்தது.
அதேவேளை, நீச்சல் சம்பியன் பெல்ப்ஸை வீழ்த்திய சிங்கப்பூரின் ஸ்கூலிங் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.