2019 வரவுசெலவுத்திட்டத்தின் செலவு நிர்ணயம் முடிவுக்கு வருகிறது

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக ஒவ்வொரு அமைச்சுக்களினதும் செலவு குறித்த விபரங்களை பெற்றுக் கொள்ளும் பணி அடுத்த வாரத்தில் பூர்த்தி செய்யப்படுவதாக திறைசேரி தெரிவித்துள்ளது.

இதுவரையில் பல அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க முன்னர், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கம் ஆகியவற்றின் ஆலோசனைகளும் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இந்தக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அடுத்த மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். பல அமைச்சுக்களுக்காக இந்த வருடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் மூலம் இதுவரையில் 30 தொடக்கம் 40 சதவீதததிற்கும் இடைப்பட்ட தொகையையே செலவு செய்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் சில மாதங்களுக்குள் எஞ்சியுள்ள நிதி உரிய பணிகளுக்கு செலவிடுவதன் அவசியத்தை செயலாளர்களுக்கு இந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு