இன்று மாலை ஜனாதிபதி செயலணி கூட்டம்!!

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் இது தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கு கொள்வார்கள் என கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் பங்கு கொள்ள வேண்டாமென கூட்டமைப்பின் தலைவருக்க வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கூறியருந்தார்.

எனினும் அதனைக் கூட்டமைப்பு நிராகரித்திருந்த நிலையில் இன்றைய கூட்டத்திற்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் பங்கு கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே இன்றைய தினம் இடம்பெறவுள்ள அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தமிழ் மக்கள் பிரதி நிதிகள் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என முன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகாலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருதங்கேனியில் இடம்பெற்ற நிகழ்வெய்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு