மகாவலி எல் வலயம் ஊடாக முல்லைத்தீவு மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி முல்லைத்தீவில் சற்றுமுன்னர் மாபெரும் பேரணி ஆரம்பமானது.
முல்லைத்தீவு பி.டபிள்யூ சந்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை இன்று போராட்டம் நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.