பம்பரகல மாதிரிக் கிராமம் இன்று மக்களிடம் கையளிப்பு

இரத்தினபுரி பம்பரகல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்படவிருக்கிறது.

‘அனைவருக்கும் நிழல்’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இரத்தினபுரி பம்பரகல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாதிரிக் கிராமம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இதில் 42 வீடுகள் காணப்படுகின்றன. நீர்இ மின்சாரம்இ நுழைவு வீதி உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு மேலதிகமாக 500 பயனாளிகளுக்கு 50 மில்லியன் ரூபா பெறுமதியான கடனுதவியும் வழங்கப்படவிருக்கிறது. மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ் மக்களுக்காக கையளிக்கப்படும் 113வது மாதிரிக் கிராமம் இதுவாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு