சுமத்திரனின் கருத்தை ஏற்க மறுத்தார் மாவை!

தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஸ்டியை கைவிட்டுள்ளதாக சுமந்திரன் கூறிய கருத்தினை மேற்கோள் காட்டி வெளியிடும் கருத்துக்களினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதி ராஜா ஏற்க மறுத்துள்ளார்.
மேலும் நேற்றைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அமரர் வி.தர்மலிங்கம் மற்றும் அமரர் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரின் 33 ஆவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் இடம் பெற்றுள்ள போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டம் யாழ்ப்பாணம் – மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் இடம் பெற்றுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாண கல்விச் செயற்பாடுகள், படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் யாழில் இடம் பெற்றுள்ள நிகழ்வு ஒன்றில் வைத்து கூறினார்.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிற நிலையில், அதற்கு உரிய தீர்வை தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்டுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.
பசறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இவர்கள் இருவரினுடைய கருத்துக்களினையும் சேர்த்தே அவர் குறித்த கருத்தை நிராகரித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு