இ.போ.ச. ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு சம்பளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் தொழிற்சங்கத்தினருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மன்னார் மற்றும் தென் மாகாணங்களில் பல பிரதேசங்களிலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு செல்லும் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்நிலையில் அவர்களது சம்பளங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்ச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு ரயில் ஊழியர்கள், பேருந்து ஊழியர்கள் என பலரால் பணிப் பகிஷ்கரிப்பு அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்றது.

இதனால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு