காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்மானம் எடுக்க இருக்கும் ஜனாதிபதி

காணாமல் ஆக்கப்பட்டோரது பணியகத்தின் இடைக்கால அறிக்கை இன்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலியபீரிஸ் இதனைத் குறிப்பிட்டு உள்ளார்.
குறித்த அறிக்கையானது கடந்த மாதம் 30ம் திகதியே ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்தது.
எனினும் அவர் நாட்டில் இருக்காத காரணத்தினால், இன்றையதினம் வரையில் இந்த நடவடிக்கை பிற்போடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிமனை செயற்பட ஆரம்பித்த குறுகிய காலத்தில் மேற்கொண்ட சந்திப்புகள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வழங்கப்படக்கூடிய இடைக்கால நீதி நிவாரணம் உள்ளிட்ட விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு