விருது வளங்க இருக்கும் ஜனாதிபதி

2016ஆம் ஆண்டின் உயர்ந்தபட்ச செயற்றிறனை வெளிப்படுத்திய 101 அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் தேசிய விருது வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு  பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று காலை நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குக் குழு இந்த மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. இதன் போது 837 அரச நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் லஸந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்தியிருந்தன என்பது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு