சிங்கபூருக்கு இலங்கையினை இனாமாக்க கொடுத்த அரசாங்கம்

சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக உடன்படிக்கையானது நாட்டின் சுயாதீனத்தை காட்டிக் கொடுக்கும் ஒரு உடன்படிக்கையாக மாறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை மூலம் நாட்டிற்கு கிடைக்க பெற்றுள்ள நன்மை என்னவென கூற அதில் கைச்சாத்திட்டவர்களுக்கும் முடியாதுள்ளது.

இதன்மூலம் இதுவொரு சட்டவிரோத உடன்படிக்கை என நிரூபனமாகியுள்ளது.

இதனை எதிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூர் – இலங்கை சட்டவிரோத திருட்டு வர்த்தக உடன்படிக்கைக்கு ஏன் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஜே.வி.பி இன்றைய தினம் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று புறக்கோட்டை அரசமர சந்திக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு