இரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா

சிரியாவின் வடமேற்குபகுதியில் உள்ள இட்லிப்பில் நிலை கொண்டுள்ள படையினர் இரசாயன ஆயுதங்களை தயார்செய்துவருகின்றனர் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என சிரியாவிற்கான அமெரிக்காவின் புதிய விசேட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில்  எஞ்சியுள்ள பகுதி மீது மேற்கொள்ளப்படும் எந்த தாக்குதலும் நிலைமையை மேலும் மோசமானதாக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்

இந்த எச்சரிக்கையை நாங்கள் விடுப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன என தெரிவித்துள்ள ஜிம் ஜெவ்ரி இரசாய ஆயுதங்களை தயாரிக்கின்றனர் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

ரஸ்ய சிரிய படையினர் மேற்கொள்கின்ற இரசாயன தாக்குதல்கள் உட்பட்ட தாக்குதல்கள் காரணமாக பெருமளவு மக்கள் அகதிகளாக இடம்பெயரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு