சுன்னாகத்தில் வாள்களுடன் மூவர் கைது!

வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும் இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வாள்களுடன் பயணிப்பதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வீதி சோதனை நடவடிக்கையில் சுன்னாக பொலிஸார் ஈடுபட்டு இருந்த வேளையே மூவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் உடுவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்கள் 21, 23 வயதுகளையுடையவர்கள் எனவும் , அவர்களிடம் மேலதிக விசரானைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாக பொலிஸாரர் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு