க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணி இன்று ஆரம்பமானது.
எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டு பணி இடம்பெறவுள்ளது.
இரண்டாம் கட்டவிடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக 24 பாடசாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. நான்கு பாடசாலைகள் முற்றாக மூடப்படுவதோடு ஏனைய 20 பாடசாலைகளும் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.