யுத்தத்தால் பாதிப்புற்று வாழும் இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.