இலங்கை கிறிக்கேட் அணியின் நிலை

14வது ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஸ் அணியிடம் 137 ஓட்டங்களினால் தோல்விகண்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்தப் போட்டி இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்பிகுர் ரஹிம் 144 ஓட்டங்களை அதிகூடுதல் ஓட்டங்களாக பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 4 விக்கட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தார்.
இதையடுத்து, 262 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 35.2 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் டில்ருவான் பெரேரா 29 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.
இதேவேளை, இன்றைய தினம் பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான போட்டி பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு