மண்டபம் முகாமில் மோதல் – பலர் காயம்

தமிழகம் மண்டபம் அகதி முகாமில் பொலிஸாருக்கும் அதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

மண்டபம் அகதி முகாமில் நடைபெற்ற திருவிழாவொன்றின் போது பொலிஸாருக்கும் அகதிகளுக்கும் இடையே இந்த மோதல் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சகாய மாதா ஆலயத்தின் 60ஆம் ஆண்டிற்கான திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் அகதிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

அகதி முகாமில் இருந்தவர்கள் பொலிஸார் மீது போத்தல்கள் மற்றும் கற்களை எறிந்தாகவும், இந்த தாக்குதலில் மண்டபம் பொலிஸ் நிலைய சிறப்பு ஆய்வாளர் மற்றும் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இராமநாதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பொலிஸார் கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு