தப்பிய பொலிஸ் மா அதிபர் – செய்தி உண்மையில்லை

சிறப்புச் செய்திகள் செய்திகள்

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை அவரது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்களென வெளியாகிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொலிஸ் மா அதிபருக்கு பிரதமரால் எவ்வித அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனரல் சுதர்ஷன குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு எந்த அறிவுறுத்தலையும் விடுக்கவில்லை என்று, சட்டம் ஒழுங்குகள் பிரதி அமைச்சர் நலின் பண்டார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சட்டம் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.