இனவாதத்தினை தூண்டிய சுமந்திரனுக்கு அடிகொடுத்த MP

தமிழ் பேசுகின்ற பரீட்சார்த்திகள் அதிகம் சித்திப் பெற்றார்கள் என்பதற்காக கடந்த ஆண்டு அரச நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையை ரத்து செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த விடயத்தை நேற்றைய அமர்வின் போது சுட்டிக்காட்டினார்.

குறித்த பரீட்சையில் 59 பேர் தோற்றி இருந்ததாகவும் அவர்களில் சித்திப் பெற்றவர்களுள் 21 பேர் தமிழ் பேசுகின்றவர்கள் என்பதால், அந்த பரீட்சையை ரத்து செய்து புதிதாக நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது மிகவும் பாரதூரமான பிரச்சினை என்பதோடு, இனரீதியான பாகுபாடாகவும் அமையும் என்பதால் அரசாங்கம் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தவிடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் சபையில் சுட்டிக்காட்டியதை அடுத்து, அதற்கு பதில் வழங்கிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, இந்தவிடயம் மிகவும் பாரதூரமானதும், நியாயமற்றது என்பதையும் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டார்.

அதாவது இது இனவாதத்தினை தூண்டம் பேச்சாக இருந்தது என்றும் சுட்டிக்காடடினார். இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இந்தவிடயத்தை தாம் அரச நிர்வாக அமைச்சின் அவதானத்துக்கு கொண்டு சென்று, இந்தவிடயத்தில் நியாயமான தீர்வைப் பெற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு