யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது!!

யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காங்கேசன்துறை கடற்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த படகை மறித்து சோதனையிட்ட போது படகிலிருந்து 28 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து, படகிலிருந்த வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரையும் கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்த கடற்படையினர், கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தற்போது இவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு