அபிவிருத்திக்குழுக் கூட்டம் பாகம் மூன்று

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் மூன்றாம் கட்ட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இன்றைய கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் இரண்டாவது கூட்டம் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த வேளையில், வடக்கு கிழக்கில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

அதேநேரம் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டங்களை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்து வருகிறார்.

அவர் கடந்த அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கடிதம் மூலம் கோரி இருந்தார்.

எனினும் இந்த கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரைத் தவிர, கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.