சுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்

உலகச் செய்திகள்

சுவிஸ்ஸில் முகத்திரை அணிய தடை விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் இஸ்லாமிய பெண்களுக்கு விதிக்கப்படும் அபராத்தை தாமே செலுத்த உள்ளதாக சமூக ஆர்வலரும் தொழிலதிபருமான Rachid Nekkaz அறிவித்துள்ளார்.

புதனன்று St Gallen மாகாணத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சமூக ஆர்வலர் Rachid Nekkaz இதை தெரிவித்துள்ளார்.

தலைநகர் St Gallen-ல் முகத்திரை அணிந்த இஸ்லாமிய பெண் ஒருவருடன் வந்திறங்கிய Nekkaz,

நாட்ட்ன் அனைத்து பெண்களுக்கும் அவர்களுக்கான தனிமனித உரிமை உள்ளது. மட்டுமின்றி மதம் தொடர்பான நம்பிக்கையை பின்பற்றும் சுதந்திரமும் உள்ளது. அந்த சுதந்திரத்தை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்றார்.

பிரான்ஸ் நாட்டில் பிறந்த அல்ஜீரிய தொழிலதிபரான Rachid Nekkaz, டிசினோ மாகாணத்திலும் கடந்த 2016 ஆம் ஆண்டு இதேபோன்று முகத்திரை அணிந்த இஸ்லாமிய பெண்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தியுள்ளார்.

தனிப்பட்டமுறையில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதை எதிர்க்கும் Rachid Nekkaz, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் உள்ள 6 நாடுகளில் முகத்திரை அணிந்ததாக அபராதம் விதிக்கப்பட்ட 1,553 வழக்குகளில் அபராத பணத்தை செலுத்தியுள்ளார்.

இது சுமார் 318,000 யூரோ அளவுக்கு இருக்கலாம் என சுவிஸ் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

St Gallen மாகாணத்தில் செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது வீதியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.