கர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பாஷா என்பவருக்கும்(37), ரஷீயா(26) என்ற பெண்ணுக்கும் கடந்த 2011- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

பெங்களூரில் வசித்து வந்த அசினா என்ற இளம் வயது பெண்ணுடன் பாஷாவுக்கு தவறான பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 2013- ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி பாஷாவும், அசினாவும் தகாத உறவில் இருந்த போது, ரஷீயா நேரில் கண்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாஷா, அவருடைய தந்தை பஷீர் சாய்பு(72), தாய் அபினாபீ(65) மற்றும் அசினா ஆகியோர் சேர்ந்து ரஷீயாவை தாக்கியதுடன், மண்எண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர்.

அப்போது 7 மாதக் கர்ப்பிணியாக இருந்த ரஷீயா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தனது மகளை கணவர் குடும்பத்தார் கொன்று விட்டதாக ரஷீயாவின் தந்தை அன்வர் பொலிஸாரிடம் முறையிட்டார்.

இதன் அடிப்படையில் இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்குக்கு நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரஷீயாவை எரித்து கொலை செய்த குற்றத்திற்காக பாஷா உள்ளிட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு