குடிநீர்ப்போத்தல் நீர் சுத்திகரிக்க படாதது

உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத குடிநீர் போத்தல்கள் சந்தையில் காணப்படுவதாக அகில இலங்கை தரமான குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விசேடமாக இனங்காணப்படாத சிறுநீரக நோய் காணப்படும் பகுதியில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் நீர், போத்தல்களில் அடைக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் சுனில் அத்தபத்து  தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குடிநீர் போத்தல்கள் அநுராதபுரம், கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு