சச்சினின் சதத்தினை முறியடித்த விராட் கோலி

இந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோலி குறைந்த இன்னிங்சில் அதிக சதங்களை அடித்து இந்திய வீரர் சச்சின் டென்டுல்காரின் சாதனையை முறியடித்துள்ளார்.

நேற்றைய தினம் இந்திய அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் சதம் ஒன்றை பெற்றுக்கொண்டதன் மூலம் விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

விராட் கோலி, 386 இன்னிங்ஸ்களில் விளையாடி, டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் பெற்றுள்ளார்.

இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதங்கள் பதிவுசெய்து, பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார்.

ஏற்கனவே, சச்சின் டெண்டுல்கர் 426 இன்னிங்ஸ்களில் 60 சதங்களை அடித்து முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு