யாழ் இளைஞன் 151 கிலோ கேரளக் கஞ்சாவுடன் கைது

இந்தியாவில் இருந்து படகு மூலமாக கேரள கஞ்சாவை கொண்டு வந்த இரண்டு பேரை கடற்படை, காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளது.

சந்தேக நபர்களுடன் பொறுப்பேற்கப்பட்ட 151 கிலோ 700 கிராம் கஞ்சா தொகையை கடற்படையினர், காங்கேசன்துறை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் 19 மற்றும் 29 வயதான யாழ்ப்பாணம் – இளவாளை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு