இலங்கை கிரிக்கட் சபையில் ஊழல்

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் பிரதான நிதி அதிகாரி பியல் நந்தன திசாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை ஊடக பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு சொந்தமான 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பிறிதொரு கணக்கில் வைப்பிலிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவில் அண்மையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறும் போட்டிக்கான தொலைக்காட்சி உரிமத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைக்க பெற்ற நிதியை ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் கணக்கில் வைப்பு செய்யாமை தொடர்பிலே பிரதான நிதி அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு