முதலும் கடைசியுமான மாகாணசபை அமர்வு இன்று

முதலாவது வடமாகாண சபையின், இறுதி அமர்வு இன்று நடைபெற்றது.

நாளை நள்ளிரவுடன் மாகாண சபை கலைகின்ற நிலையில், இன்றையதினம் இடம்பெறும் கூட்டம் சபையின் 134வது அமர்வாக அமைகிறது.

இன்றையதினம் மாகாண சபைக்கான கீதம் இசைக்கப்பட்டு, சகல உறுப்பினர்களாலும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக எமது வடமாகாண சபை செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை இன்று கையளித்துள்ளார்.

ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்ற பெயரில் அனந்தி சசிதரன் தமது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு