உத்தியோ பூர்வ அறிவிப்பு பிரதமர் மாற்றம்

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம் மேற்கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிலையில், தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த நிகழ்வின்போது அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம், அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

‘இலங்கை அரசியலமைப்பின் 42(4) சரத்திற்கு அமைய, இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பிரதமராக தங்களை நியமித்த தான், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில், பிரதமர் பதவியிலிருந்து தங்களை நீக்குவதாக இதனூடாக அறியத்தருகின்றேன் என கடிதம் மூலம் பிரதமருக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன். இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எம்.ஆர்.லதீப் உள்ளிட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள் சிலர் புதிய பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷவை நேற்றிரவு சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு