அகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய விலகியுள்ளார்.

அவரின் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு பதிலாக அமில அபோன்சு அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியின் பிரபல துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவும் இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை இதற்கு காரணமாகும்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக சதீர சமரவிக்ரம அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு