கோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பு அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது. மேலும் இருவருக்கிடையிலான சந்திப்பு ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரிலேயே நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மஹிந்த பிரதமரானதையடுத்து அவருக்குரிய ஆசத்தையும், உரிமைகளையும் வழங்க சபாநாகர் தயாராகவிருக்கும் இச்சமயம் அலரி மாளிகையை விட்டு வெளியேறவேண்டிய நிலையில் உள்ளார் முன்னாள் பிரதமர் ரணில்.

ஆகவே வெளியேறிய பின்னரான அவருடைய பாதுகாப்புக்கள் தொடர்பிலும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சிக்கல்கள் குறித்தும் பேசப்பட்டதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு