மகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு

தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஐந்து விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.

பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்போது சங்கத்தின் தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமண அறிக்கையை சமர்ப்பித்து கருத்து வெளியிடுகையில், முறைகேடாக தயாரித்த யாப்பை நடைமுறைப்படுத்துவதை இடை நிறுத்துமாறும் மத்திய வங்கி மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

தொல்பொருட்கள் அழிக்கப்படுவதை நிறுத்துவது அவசியமாகும். எனவே தொல்பொருள்கள் மற்றும் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்குகிடைக்கும் நிதியை அரச பொறிமுறைக்குள் இணைப்பது அவசியமாகும். முன் அனுமதியின்றி முன்னாள் வெளிவிவகார அமைச்சு மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த யோசனையையும், ஆணைக்குழுவின் ஆணையாளரது அறிக்கையையும் இரத்துச் செய்யுமாறும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு