ஓக்டென் 92 ரக பெற்றோல் மற்றும் ஒடோ டீசலின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக ஓக்டென் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.
ஒடோ டீசல் ஒரு லீட்டரின் விலை 7 ருபாவினால் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக ஒரு லீட்டர் ஓக்டென் 92 ரக பெற்றோரின் விலை 145 ரூபாவாகும். ஒடோ டீசல் ஒரு லீட்டர் 116 ரூபாவாகும்.
இதேவேளை முச்சக்கர வண்டிகளுக்கு சிறிய விவசாய இயந்திரங்களுக்கும் பயன்படுத்தப்படும் 2T லிகிசி எரிபொருள் உள்ளிட்ட லிகிசி ஒரு லேட்டரின் விலை 10 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றது.
இதனுடன் எரிபொருளின் விலையை தீர்மானிப்பதாக மாதாந்தம் முன்னெடுக்கப்படவிருந்த விலை சூத்திரத்திற்கு பதிலாக நடைமுறையிலான விலை முறை முன்னெடுக்கப்படவுள்ளது.