113 உறுப்பினர்கள் அல்ல120இற்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவை நாடாளுமன்றத்தில் எங்களால் காண்பிக்க முடியும். அதற்கும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமைக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமே தெரிவித்தார்.
நாடாளுமன்றம் ஒத்திவைக்கபட்டுள்ளமை மற்றும் பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமே உதயனுக்கு பிரத்தியேகமாக தகவல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமை அமைச்சராக பதவியேற்றபோது பெரும்பான்மை பலம் நிருபிக்க வேண்டும். எமக்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பதை தெரியாது எழுந்தமானமாகப் பதவியை ஏற்கவில்லை.
அவரிடத்தில் அதற்கான திட்டங்கள் உள்ளன. 113உறுப்பினர்கள் அல்ல120இற்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவை நாடாளுமன்றத்தில் எமக்குக் காண்பிக்க முடியும். அதற்கும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமைக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. வடக்கு ,கிழக்கு, தெற்கு என எல்லா பகுதியிலும் அவருக்கு ஆதரவு உள்ளது – என்றார்.