சாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் நாடாளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார். இதனையடுத்து இரு தரப்பிரும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

இரண்டு தரப்பினரும் சபாமண்டபத்துக்கு நடுவில் வந்து வாக்குவாதங்களில் ஈடுபட்டதுடன் சிலர் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை மேற்கொண்டனர். நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. உரையாற்ற ஆரம்பித்த வேளை சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மோதல்கள் உச்சமடைந்த போது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சபையில் இருந்து வெளியேறினர். பாராளுமன்றில் ஏற்பட்ட கைலப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் குப்பை கூடைகளை சபாநாயகரை நோக்கி தூக்கியெறிந்ததையடுத்தே சபாநாயகர் எந்த வித அறிவிப்பையும் விடுக்காது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு