கணவரை விட்டுப் பிரிந்தேனா? விளக்கமளிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் சென்னையில் வசித்து வருவதுடன், அவருடைய கணவர் இயக்குனர் வம்சி ஐதராபாத்தில் இருப்பதனால் இருவரும் பிரிந்து விட்டார்களென வதந்தி கிளம்பியது.

இதற்கு பதிலளித்துள்ள ரம்யா கிருஷ்ணன், கணவர் தெலுங்கு படம் இயக்குவதால் ஐதாராபாத்தில் இருப்பதாகவும், நான் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வசதியாக சென்னையில் வசிப்பதாகவும் தெரிவித்தார்.

நேரம் கிடைக்கும் போது கணவர் சென்னை வருவார். அல்லது நான் அங்கு செல்வேன். ஒரேநேரத்தில் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்வோம். நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம் என ரம்யா கிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு