முருகன் தாயாரை சந்திக்க அனுமதி கோரி மனுத்தாக்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், தனது தாயாரை சந்திக்க அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்யப் போவதாக அவரது சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில், முருகன் வைக்கப்பட்டுள்ள அறையில், அண்மையில் பொலிஸார் சோதனை நடத்தியதில், விலையுயர்ந்த இரு கையடக்கத் தொலைபேசிகள், சார்ஜர், சிம் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட யாரையும் மூன்று மாதங்களுக்கு சந்திக்க முருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கிடையில், முருகனிடம் கையடக்கத் தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வேலூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஆஜர்ப்படுத்தப்பட்ட முருகனைப் பார்க்க, இலங்கையில் இருந்து வந்திருந்த அவரது தாயார் சோமணிக்கு பொலிஸார் அனுமதியளிக்கவில்லை எனவும், சிறையில் வைக்கப்பட்டுள்ள முருகன், நளினி ஆகியோரை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவிக்கையில், சிறையிலுள்ள முருகனை அவரது தாயார் சந்திக்க முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. முருகனின் தாயார் சோமணி மே 29ஆம் திகதி இலங்கை செல்ல வேண்டும் என்பதால், அவரை சந்திக்க அனுமதியளிக்கக்கோரி திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு