வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம் (Video)

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதாரத் தொண்டர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள், நேற்று (12) நுழைவதற்கு முயன்ற போது பொலிஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை நிறைவு செய்த பின்னர் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்ட போது, ஜனாதிபதியை சந்திப்பதற்கு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். இச்சந்தர்ப்பத்திலேயே பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு