அணித் தலைவர்களாக தினேஸ் சந்திமால், உபுல் தரங்க நியமனம்

செய்திகள் விளையாட்டு

ஒருநாள் மற்றும் 20க்கு இருபது போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கை டெஸ்ட் அணித் தலைவராக தினேஸ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற சிம்பாபே அணியுடனான ஒருநாள் தொடரை 2-3 என இலங்கை அணி இழந்திருந்ததைத் தொடர்ந்து, முன்வைக்கப்பட்ட விமர்சனங்களைத் தொடர்ந்து இலங்கை அணித் தலைவராக இருந்த அஞ்சலோ மெத்தியூஸ், தலைமைப் பொறுப்பில் இருந்து விலக தீர்மானித்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்தே, இலங்கை அணிக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.