புலிகள் அமைப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச் சட்டம்!

சிறப்புச் செய்திகள் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்னும் குற்றம் சுமத்தப்பட்டவர்க்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற போது இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன் என்பவர் கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்.

இவர் மீதுஇ கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர்இ தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்று குற்றம் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு மீதான விசாரணையின் போது பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் நிருபணமானது.

இதனால் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துதுள்ளது.