77 இந்திய மீனவர்களுக்கு விடுதலை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய 04 மாவட்டங்களைச் சேர்ந்த 92 மீனவர்களை, கடற்படையினர் கைது செய்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை கைது செய்யப்பட்ட இவர்கள், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் ஆகிய மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர், இது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களை எழுதியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், மீனவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரைக் கடிதத்தை, இலங்கை அரசாங்கம் கடந்த 25ஆம் திகதி வழங்கியிருந்த போதிலும், படகுகளை விடுவிக்க மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஊர்க்காவற்துறை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய நீதிமன்றங்களில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட 77 தமிழக மீனவர்களும், விடுதலை செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் 77 பேரும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்களெனத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு