ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்; கூட்டு எதிரணியின் கோரிக்கை

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பந்துல குணவர்த்தன மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகிய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனுவொன்றை கையளித்துள்ளனர்.

குறித்த உடன்படிக்கையிலுள்ள பாதிப்புத் தன்மை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு நேற்று (28) நாடாளுமன்றத்தில் தமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லையென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை அனுமதிப் பத்திரத்தில் ஹம்பாந்தோட்டைத்துறை உடன்படிக்கை தொடர்பில் அனுமதி பெற்ற விடயங்கள் மற்றும் தற்போது அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு