குற்றப்புலனாய்வின் உத்தரவை மீறி நழுவிய ஷிரந்தி-யோசித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வரான யோசித ராஜபக்ஷ ஆகியோர் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரையும், ரக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் அவர்கள் விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்பதால் வேறொரு நாளில் விசாரணைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு