யாழில் பொலிஸார் மீது துரத்தித்துரத்தி வாள் வெட்டு!

வாள்வெட்டிற்கு இலக்கான இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் இன்று (30) பிற்பகலுக்கு பிற்பாடு கொக்குவில், பொற்பதி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரிய வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸார் என தெரிவிக்கப்படுகிறது.

4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவிக்கிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு