சிற்றங்காடி கடைத்தொகுதி திறந்துவைப்பு (Photos)

யாழ் நகர நடைபாதை வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கையின் விளைவாக 13 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட நகர மத்தி சிற்றங்காடி கடைத்தொகுதி இன்று ஞாயிற்றுக்கிழமை வடமாகாண முதலமைச்ர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்.

யாழ் நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் கோரிக்கைக்கமைவாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காணியில் 76 கடைத்தொகுதிகளை கொண்டதாக இந்த நகர மத்தி சிற்றங்காடி அமைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனின் பகிரத முயற்சியின் பலனாக இக்கடைத்தொகுதியை அமைக்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 13 மில்லியன் நிதிpயில் இக்கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன

யாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இந்த நகர மத்தி சிற்றங்காடியை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார்.

மேலும் வியாபாரிகளுக்கான திறவுகோல் மற்றும் ஒப்பந்த பத்திரமும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது

வடமாகாணசபை உறுப்பினர்களான ஏ.ஆர்னோல்ட் அயூப் அஸ்மின் விந்தன் கனகரட்ணம் அரியகுட்டி பரம்சோதி மாவட்ட மேலதிக அரச அதிபர் சுகுணவதி தெய்வேந்திரம் யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு