கோப்பாய் பொலிசாரைத் தாக்கிய இருவர் கைது

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 வயது மற்றும் 22 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்தவாரம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸார் மீது ஆவாக் குழுவினைச் சேர்ந்த 10இற்கும் மேற்பட்ட நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

வாள்வெட்டிற்கு இலக்காகிய இரு பொலிஸாரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் யாழில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், ஆவா குழுவின் முக்கிய நபர்கள் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருந்தமைக்கு இணங்க, இன்று காலை குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய ஆவா குழுவைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு