அமெரிக்காவின் தடைவிதிப்பு வெனிசுலா ஜனாதிபதி மீது பாய்ந்தது

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளதுடன், மதுரோ ஒரு சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக அதிபர் நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்ததுடன், தேர்தலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடாத்தப்பட்ட அதேவேளை, சில இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன.

இச்செயற்பாடுகளைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், வேட்பாளர் ஒருவர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டிருந்த போதிலும், இந்த வன்முறைக்கு மத்தியிலும் பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த தேர்தல் முடிவடைந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து, இதில் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருப்பதாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜான் – உன், சிரிய அதிபர் ஆசாத் ஆகியோருக்கு பிறகு மதுரோ மீது அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு